திங்கள், 25 பிப்ரவரி, 2013

தமிழ் காத்து வாழ்வோம்
தமிழ் அழகு மொழி - அறிவு
சிறந்தோர் உதித்த மொழி
தமிழுக்கு அழகு ழகரம் - அந்த 
தமிழ் இன்று இழந்தது பல 


நாடு இழந்தோம்
நகரிழந்தோம்
தன்னிகரிலா உறவுகளை இழந்தோம்
தங்கி வந்த நாட்டில்
தமிழில் எங்கள் பேரிழந்தோம்
இத்தனையிலும் பெருமையும் கொண்டோம்
இது எங்கள் சிறுமைதானே

தமிழன் நாம் பலர்
பேசுவது தங்கிலிஸ்
பேசுவது தங்கிலிஸனாலும்
அதிலும் பெருமை கொள்ளும்
சிற்றரிவினர் எம்மில் பலர்

லகரமும் ழகரமும் றகரமும்  ரகரமும்
எம்மில் பலருக்கு
சரியாக வருதில்லையாம்

தமிழை காதலி
தமிழுக்காக வாழ்ந்து பார்
அழகு தமிழ் உன்னோடு கொஞ்சும்

தமிழன் என்று சொல்வது பெருமை
தலை நிமிர்ந்து நிற்பது பெருமை
தமிழ் காத்து வாழ்வோம்
தலை வகுத்த வழி நிற்போம்.

வல்வையூரான் 

Post Comment

11 கருத்துகள்:

 1. அவசியமான பதிவு... தமிழ் காப்போம்...
  பதிவிற்காக நன்றி

  பதிலளிநீக்கு
 2. தமிழைக் காத்து வாழ்வோம்....!!
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிறிய இடைவெளியின் பின் உங்களைக் காண்கின்றேன். நன்றிகள் வருகைக்கும் பதிவிடலுக்கும்.

   நீக்கு
 3. காலத்தின் தேவை கருதி வெளிப்பட்ட உணர்வுகள்.
  காலங்கள் கடந்தும் தமிழ் வாழும் உங்களை போன்ற உணர்வாளர்களால். வாழ்த்துக்கள் ஐயா.

  பதிலளிநீக்கு
 4. தமிழன் என்று சொல்வது பெருமை
  தலை நிமிர்ந்து நிற்பது பெருமை
  தமிழ் காத்து வாழ்வோம், இதை தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாக புரிந்துகொண்டால் சரிதான். புரிந்தால் தானே தம்பி....:)

  பதிலளிநீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.