புதன், 13 பிப்ரவரி, 2013

இதயங்களில் ஏற்றிய பெருநெருப்பு


தடுமாற்றங்களும்
குழப்பங்களும்
நிறைந்த மன நிலை
நாம் என்ன செய்ய


2009
உலகமே சேர்ந்து
குழப்பியது எம்மை
குவிந்தது தாயகத்தில்
பிணங்களின் குவியல்

கந்தக புகை நிறைந்தது எங்கும்
நச்சு புகையும் சேர்ந்தே இருந்தது
இலங்கையில் ஓரினம்
இன்னோரினத்தின் முகவரி பறித்தது
பார்த்தது சர்வதேசம்
சதியில் ஐநாவும் பங்கெடுத்தது

உரிமைக் குடி ஒன்றின்
உரிமை மறுப்பை
உலகம் பார்த்தது
உரத்து அறிக்கை விட்டன
சில நாடுகள்
சிறிலங்கா செய்ததை
சரி என்று!!!

துன்னாலைப் பிறந்தவன்
லண்டன் நகர் வசித்தவன்
மூவொன்பதாண்டு வயதுளான்
முருகதாசெனும் பெயருளான்
மூண்ட சினம் கொண்டான்
உலகுக்கு உண்மை நிலை
புகன்றிட வந்தான்.

ஏழு பக்கத்தில்
எழுதி முடித்தான்
மரண சாசனம்
உண்மைக்காய்
உயிர்தரும் தமிழன்
முருகதாசன் என்று
ஒப்பமுமிட்டான்

சுதந்திரக் கதவு
ஒருநாள் திறக்குமென்றான்
துறந்தான் தன்னுயிர்
ஈந்தான் தன்னுடல்
சுதந்திர தீயில்

ஜெனிவாவில் ஐநா சபை
அதிர்ந்தாலும்
அலட்டிக்கொள்ளவில்லை
இன்றுவரை

இன்னவன் இழப்புக்கு
சர்வதேசமே
நீ ஒருநாள்
பதில் சொல்லியே
ஆக வேண்டும்

எரிந்தவன்
வாழ்கின்றான்
எம் இதயங்களில்
ஏற்றிய பெருநெருப்பாய்

வல்வையூரான்

Post Comment

4 கருத்துகள்:

 1. எரிந்தவன்
  வாழ்கின்றான்
  எம் இதயங்களில்
  ஏற்றிய பெருநெருப்பாய் ////

  பெருநெருப்பு தணியாது
  பெருஞ்சுவாலையாய் எரியட்டும்..
  முருக தாசனின் மூச்சு எம்மண்ணில்
  முரசமாய் ஒலிக்கட்டும்..

  உணர்வூட்டும் வரிகள்.. அழகாக கோர்த்தெடுத்திருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றிகள் பூங்கோதை வரவுக்கும் கருத்துக்கும். ///பெருநெருப்பு தணியாது
   பெருஞ்சுவாலையாய் எரியட்டும்..
   முருக தாசனின் மூச்சு எம்மண்ணில்
   முரசமாய் ஒலிக்கட்டும்..//// இன்றைய தேவையும் அதுதான்.

   நீக்கு
 2. அணையா நெருப்பிவன்.மாமனிதருக்குள் இவனுமொருவன் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் அக்கா. ///அணையா நெருப்பிவன்.மாமனிதருக்குள் இவனுமொருவன் !/// சத்திய வார்த்தைகள்.

   நீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.