சனி, 13 ஜூலை, 2013

பிரச்சனைத் தீர்வு.


பல்வேறு எண்ணங்கள்
பல நூறு பிரச்சனைகள்
மண்டையில நிண்டு குடையும்


குடைகின்ற பிரச்சனைகளை
குவித்தொரு பக்கம் வைத்து
குழப்பத்திலிருந்து மீள நினைக்கும் மனசு

மனசது நினைத்துவிட்டால்
மாளுமோ பிரச்சனை
அண்டை அக்கம் அரட்டும் வாய்

வாயரற்றியதால் வலுக்கொள்ளும்
வழுக்கிபோகவிருந்த பிரச்சனைகளும்
வம்பு சண்டைகளுக்கும் வழிவிட்டு நிக்கும்

நிக்கின்றவரிடமெல்லாம் அரற்றி
நிம்மதியை நிலையாய்த்தொலைத்து
நீ கண்ட பலன் தான் என்ன?

என்ன கஷ்டங்கள்
என்ன துன்பங்கள் வந்தாலும்
ஒரு கண நேரமொதுக்கு அதற்கு

அதற்கான நேரத்தில்
அமைதியாய் சிந்தனை செய்
நெற்றிக்கண்ணாய் அகக்கண் திறக்கும்

திறந்த சிந்தனை
தெளிவாய் சொல்லும் தீர்வு
திடமாக நம்பு! தீர்வுகளை வெல்லு!!

வென்றபின் பார்
வெற்றிடமனது நிரம்பியிருக்கும்
நிரம்பிய சந்தோசத்தோடு நிம்மதியாயிரு

வல்வையூரான்.

Post Comment

24 கருத்துகள்:

  1. திறந்த சிந்தனை
    தெளிவாய் சொல்லும் தீர்வு
    திடமாக நம்பு! தீர்வுகளை வெல்லு!!
    >>
    தன்னம்பிக்கை ஊட்டும் வரிகள் அருமை

    பதிலளிநீக்கு
  2. /// அமைதியாய் சிந்தனை செய்...
    நெற்றிக்கண்ணாய் அகக்கண் திறக்கும்... ///

    கண்டிப்பாக... சிறப்பான கருத்துள்ள வரிகளுக்கு வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  3. ////////////அமைதியாய் சிந்தனை செய்
    நெற்றிக்கண்ணாய் அகக்கண் திறக்கும்

    திறந்த சிந்தனை
    தெளிவாய் சொல்லும் தீர்வு
    திடமாக நம்பு! தீர்வுகளை வெல்லு!! ////////////

    முற்றிலும் உண்மைதானே... அமைதி மட்டும் மனதில் குடிகொண்டால் போதும்.. எதையும் தீர,தெளிவாக சிந்தித்து, செயல்பட்டு வெற்றிகளை அள்ளிவிடலாம்.. இதுதான் வெற்றியின் சூட்சுமும் கூட..

    பகிர்வுக்கு நன்றி !!!

    பதிலளிநீக்கு
  4. நிக்கின்றவரிடமெல்லாம் அரற்றி
    நிம்மதியை நிலையாய்த்தொலைத்து
    நீ கண்ட பலன் தான் என்ன?

    மேலும் மேலும் குழப்பம் தான் -சிறந்த வரிகள்
    வாழ்த்துக்கள் சகோ .

    பதிலளிநீக்கு
  5. பிரச்சனைகளுக்கான தீர்வை மிகவும் அழகான அந்தாதி' யாப்பில் கூறிய விதம் சிறப்பு... அதிலும் முதல் இரண்டு அடிகளை மோனை'யில் சிறப்பாக கூறியுள்ளீர்கள்... சிறப்பான படைப்பு... எந்தப் பிரச்சனைகள் வந்தாலும், அதற்க்கு நேரம் கொடுத்து அமைதியாக சிந்தித்தால் விடுபடலாம் என்பதை

    அமைதியாய் சிந்தனை செய்
    நெற்றிக்கண்ணாய் அகக்கண் திறக்கும்

    என கூறிய விதம் சிறப்பு....

    வாழ்த்துகள் அண்ணா... நல்லதொரு படைப்பு...

    பதிலளிநீக்கு
  6. தமிழ் மணம்: 4

    ஏன் தமிழ் 10, இன்ட்லியில் இணைக்காமல் விட்டுவிடுகிறீர்கள்... அதிலும் இணைத்து விட்டேன்...

    பதிலளிநீக்கு

  7. வணக்கம்!

    வல்வையூா் வாணா் வகுத்த வழியாவும்
    தொல்லையைப் போக்கும் தொடா்ந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதைக்கு கவி புனையும் வித்தகரே
      குவித்தேன் கூறினேன் நன்றி.

      நீக்கு
  8. வென்றபின் பார்
    வெற்றிடமனது நிரம்பியிருக்கும்
    நிரம்பிய சந்தோசத்தோடு நிம்மதியாயிரு//

    ரசித்த வரிகள்...!

    பதிலளிநீக்கு
  9. குவித்தொரு பக்கம் வைத்து
    குழப்பத்திலிருந்து மீள நினைக்கும் மனசு//ரசித்த வரிகள் ஐயா அருமையான ஜோசனை.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. கருத்துச் செறிவுள்ள கவிதை. "வாயரற்றியதால் வலுக்கொள்ளும்
    வழுக்கிபோகவிருந்த பிரச்சனைகளும்
    வம்பு சண்டைகளுக்கும் வழிவிட்டு நிக்கு?

    பதிலளிநீக்கு
  11. நன்றி அண்ணா !! எனக்கு தேவையானதொரு அறிவுரை இது !! நேரம் ஒதுக்கி சிந்தித்து தீர்வு நோக்கி நகர விளைகிறேன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் துரை. வாருங்கள். தொடர்ந்து வாருங்கள்.

      நீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.