திங்கள், 19 ஆகஸ்ட், 2013

ஹைக்கூகள் 19


கொன்று குவித்து கொளுத்தி எரித்தபின்னும்
கொழுந்துவிட்டு எரிந்தது
சாதியம்


 ஒப்பாரி ஓலத்திலும்
சிரித்தபடி இருந்தன
பிணத்தில் இருந்த மாலைகள்.

  
குளமெங்கும் நிறைத்து பூத்திருந்தாலும்
யாரும் பறிக்கவில்லை
அது ஆகாயத்'தாமரை'.


 திருடிக்கொண்டதால்
அகப்பட்டு ஆயுள்கைதியானான்
இதயத்திருடன்.


கொடும் விஷம் கொண்டவைதான்
சர்ப்பங்கள் இல்லை
சனத்துள் இருக்கும் சாதிகள்


கோட்டைகளிலும் ஏற்றப்பட்டன
மண்ணெண்ணெய் விளக்குகள்
எங்குமில்லை மின்சாரம்.


வாலிக்கு வலி வரிகள்

வெண் தாடி ஒன்று
கண் மூடிக் கொண்டது
வேதனை மிகுத்ததே

குங்குமப் போட்டு ஒன்று
சங்கமமாகுது எங்களின் மனங்களில் இன்று

(18.07.2013 எழுதியது.)
வல்வையூரான்.  

Post Comment

17 கருத்துகள்:

  1. வெண் தாடி ஒன்று
    கண் மூடிக் கொண்டது
    வேதனை மிகுத்ததே
    ...........அனைத்தும் அருமை
    தொடரட்டும் உங்கள் கவிதைகள்

    பதிலளிநீக்கு
  2. அண்ணா... அனைத்தும் அழகான ஹைக்கூக்கள்...

    குங்குமப் பொட்டு என்பது குங்கும போட்டு என பிழையாக உள்ளது...

    ஒப்பாரி ஓலத்திலும்
    சிரித்தபடி இருந்தன
    பிணத்தில் இருந்த மாலைகள்.

    மனம் கவர்ந்த ஹைக்கூ... இன்னும் தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன் அண்ணா...

    பதிலளிநீக்கு
  3. அருமையான துளிப்பாக்கள் சகோதரரே...
    இரண்டாமதும் கடைசியும் மனதில் நிற்கிறது..
    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  4. அனைத்தும் அருமை... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  5. அனைத்தும் அழகான ஹைக்கூக்கள்.அருமை... வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. நண்பரே உங்களது கவிதைகள் அனைத்தும் அருமையிலும் அருமை

    பதிலளிநீக்கு
  7. கொன்று குவித்து கொளுத்தி எரித்தபின்னும்
    கொழுந்துவிட்டு எரிந்தது
    சாதியம்
    // மிக நல்ல ஹைகூ

    பதிலளிநீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.