துளையிடப்பட்டது புல்லாங்குழல்
வாசித்துக்கொண்டிருந்தவன்
வலியை மறந்தான்.
வயதானாலும்
வாலிபத்தோடு தொடர்கின்றன
வலிமையான நட்புக்கள்.
புலரும் பொழுதுகள்
வெறுமையாக
அருகில் நீ இல்லை
இறுக்கி அணைத்து முத்தமிட்டாய்
வலித்தது எனக்கு
அந்த பூனையாக நான் இல்லையே
சவாரியில் பாய்தன மாடுகள்
இறந்தது
ஜீவகாருண்யம்
காடழித்து பயிரிட்டவர்கள்
காத்திருக்கின்றனர்
மழைக்காக.
காத்திருக்கின்றனர்
மழைக்காக.
Tweet | ||||
அனைத்தும் மிகவும் அருமை...
பதிலளிநீக்குநன்றிகள் அண்ணா
நீக்குஉங்களின் கைக்கூ கவிகள் உணர்த்தும் பொருள் அழகு! ரசிக்கின்றேன்!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சகோ!
த ம.3
நன்றிகள் இளமதி
நீக்குஅன்பின் வல்வையூரான் - அனைத்துக் குறுங்கவிதைகளும் அருமை - இரசித்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குநன்றிகள் சீனா ஐயா
நீக்குஆழமான அழகான வரிகள். ரசித்தேன். காடு, ஒலி, நட்பு....மிக பிடித்திருந்தது.
பதிலளிநீக்குநன்றிகள் நிரோஷன்
நீக்குசிறப்பான ஹைக்கூக்கள்! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநன்றிகள் அண்ணா
நீக்குஅனைத்தும் அருமை.
பதிலளிநீக்குநன்றிகள் மாதேவி
நீக்குநண்பரே........
பதிலளிநீக்குஉங்கள் ஹைக்கூ கவிதைகள் நல்ல உணர்வுகளின் பிரதிபலிப்பாக அருமையாக உள்ளன...
வாழ்த்துக்கள்
நன்றிகள் அண்ணா.
நீக்குஅண்ணா, அனைத்து ஹைக்கூக்களும் அருமை...
பதிலளிநீக்குகாடழித்து பயிரிட்டவர்கள்
காத்திருக்கின்றனர்
மழைக்காக./// இதில் உங்கள் சமூக நலன் சிறப்பாகவே வெளிப்படுகிறது.
இறுக்கி அணைத்து முத்தமிட்டாய்
வலித்தது எனக்கு
அந்த பூனையாக நான் இல்லையே//// உங்கள் ஏக்கம்...
தினமும்
தூங்கிக்கொண்டிருக்கிறேன்
நில(னை)வோடு//// உங்கள் காதல்.
வெளிப்படுத்தப் படும் உணர்வுகள் அனைத்தையும் ஆழமாகவும், சிறப்பாகவும் வெளிப்படுத்துகிறீர்கள்... மிக்க நன்றி.
நன்றிகள் வெற்றி வருகைக்கும் கருத்துக்களுக்கும்.
நீக்கு