திங்கள், 23 செப்டம்பர், 2013

ஹைக்கூக்கள் 22
பெற்றதாகச் சொல்லப்பட்டாலும்
இன்னும் கிடைக்கவில்லை
யாருக்கும் சுதந்திரம்.இறக்கையடித்துப் பறந்தது
கூண்டுக்குள் கிளி
சுதந்திரமாய்(...?)


  
மீட்டப்பட்டுக்கொண்டிருந்தது வீணை
தூங்கிக்கொண்டிருந்தது
குழந்தை.மாறிக்கொண்டன
மாற்றிக்கொண்டனர்
இதய மோதிரங்களை.
 சேமித்துக்கொண்டிருக்கிறேன்
தூக்கத்தை
வெளிநாட்டு வாழ்க்கை
 கூண்டுப்பறவைக்கு விடுதலையாம்
திறக்கப்பட்டது கூண்டு
சிறகுகள் வெட்டப்பட்டிருந்தன.இறக்கை வெட்டிய கிளிக்கு
திறந்து விட்ட கூண்டு
சுதந்திரம்.
பல லட்சங்கள் செலவில்
இலவச கழிவறை
பறவைகளுக்கு சிலைகள். உயிரை உறிஞ்சி குடித்துக்கொண்டிருக்கிறாய்
நிறுத்திக்கொள் விடிகிறது
உன் விளையாட்டு ஊடலை

வல்வையூரான்.    

Post Comment

12 கருத்துகள்:

 1. அனைத்தும் அருமை... படங்கள் பிரமாதம்...

  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. நிகழ்வின் நிதர்சனம் அத்தனையும்!
  வாழ்த்துக்கள் சகோ!

  பதிலளிநீக்கு
 3. படங்களும் ஹைக்கூக்களும் சிறப்பு! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 4. கொடியோடு சேர்ந்து நம் சுதந்திரமும் எங்கோ பறந்துட்டுது!!

  பதிலளிநீக்கு
 5. படத்தோடு சேர்ந்த கவிதைகள் பிரமாதம் அண்ணா....


  தூக்கம்- வெளிநாட்டு ஹைக்கூவில் உங்கள் எண்ண ஓட்டம் வெளிப்படுகிறது...


  தலைவர்கள் சிலை ஹைக்கூவில் உங்கள் நகைச்சுவை உணர்வு அழகாக வெளிப்பட்டுள்ளது அண்ணா...


  வாழ்த்துக்கள், பாராட்டுகள் அண்ணா. இன்னும் எழுதுங்கள் அண்ணா...

  பதிலளிநீக்கு
 6. வெளிநாட்டு ஹைக்கூ பிரமாதம் கவிஞரே!

  பதிலளிநீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.