செவ்வாய், 19 நவம்பர், 2013

காந்தள்களே வாருங்கள் (ஹைக்கூக்கள் 25)





கல்லறை கருக்கள்
கண்திறக்கும் காலம் 
காத்திருக்கின்றோம் வாருங்கள்.



கார்த்திகை மாதம் 
கனக்கின்ற இதயம்
கல்லறை மேனியரின் கண்திறப்பு.



காற்றென கனலென வந்தவர்கள்
கதை பேச வரும் காலம் 
காத்திருப்போம் கல்லறை வாசலில் மலரோடு...



கோயில்களில் மணியொலிக்க 
கோபுரங்கள் வரும்நேரம்
கோலமிட்டு கார்த்திகைநாள் விளக்கோடு நாம்...



காத்திருந்தன கார்த்திகைப்பூக்கள்
கல்லறைகளோடு பேசுவதற்கு
காலம் வெல்லும் கதைகளை...



உறுதிகள் உறங்க 
உணர்வுகள் விழிக்கும் 
உதிரம் தொடும் கார்த்திகை.



கொள்கைக்கான கோபுரங்கள் 
கொலுவில் வருவார்கள்
கோலமிட்டு விளக்கு வையுங்கள் கார்த்திகையில்



உடைக்கப்பட்ட பின்னரும்
உடையாத உணர்வுயிர்கள் 
எங்கள் கல்லறைத்தெய்வங்கள்



விதை(குழி) நிலங்கள் மட்டுமல்ல
வீரத்தின் விளை நிலங்கள்
விரையுங்கள் விளக்கு வைக்க...



வளமான வாழ்வமைக்க 
வரலாறைத் தந்தவர்கள்
வருகின்ற நேரம்
வல்வையூரான்.

Post Comment

11 கருத்துகள்:

  1. நாம் நினைக்குமளவிற்கு ஹைகூ வடிவம் அத்தனை எளிதல்ல. உங்களின் தொகுப்பில் மூன்று அவ்விலக்கணத்தைத் தொடுகிறது. நல்ல முயற்சி..

    ஹைக்கூ பற்றிய மேலதிக விளக்கங்களுக்கு http://www.padalay.com/2012/06/blog-post_16.html?m=1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றிகள் மயிலன். முதல் முறையாக வந்திருக்கிறீர்கள். தொடர்ந்து வாருங்கள்.

      நீக்கு
  2. நாம் நினைக்குமளவிற்கு ஹைகூ வடிவம் அத்தனை எளிதல்ல. உங்களின் தொகுப்பில் மூன்று அவ்விலக்கணத்தைத் தொடுகிறது. நல்ல முயற்சி..

    ஹைக்கூ பற்றிய மேலதிக விளக்கங்களுக்கு http://www.padalay.com/2012/06/blog-post_16.html?m=1

    பதிலளிநீக்கு
  3. சுருக்... நறுக்...

    அருமை... பாராட்டுகள்....

    பதிலளிநீக்கு
  4. மனதில் உறையும் மகத்தானவர் நினைவில்...
    அனைத்தும் அருமை!

    வாழ்த்துக்கள் சகோ!

    பதிலளிநீக்கு
  5. இன்பத் தமிழ் உணர்வோடு கலந்து
    இட்ட வரிகள் அனைத்தும்
    நெஞ்சைத் தொட்டு நின்றது இங்கே நிழலெனவே !!
    வாழ்த்துக்கள் சகோதரா .பகிர்வுக்கு மிக்க நன்றி .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகு வரிகளில் வாழ்த்துரைத்தீர்கள். நன்றிகள் சகோதரி.

      நீக்கு
  6. அருமையான கவிதைகள்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.