செவ்வாய், 5 நவம்பர், 2013

ஹைக்கூக்கள் 24




பேசவில்லை
நிறைய இருந்தன
காரணங்கள்


உச்சரிக்கப்பட்டு வந்த அகிம்சை போரின்
உத்தம வடிவம்
உணர்வுள் கலந்தது 1987.09.26 10.48.



தனித் தனியாக விழுந்தாலும்
ஒற்றுமையாக கைகோர்த்து ஓடுகிறது
சக்தி கொண்ட மழை வெள்ளம்.



இரச(யன)த்தால்
மினுங்குகின்றன
கண்ணாடிகளும் முகங்களும்.



உதிர்ந்துகொண்டிருந்தன இலைகள்
உதிராமல் உதிரத்துள்
உன் நினைவுகள்



விரட்டிக்கொண்டிருந்தது காலம்
காலத்தை
காலத்தால்



இறந்ததான மஹிஷன்
இறக்காமல் இன்னும்
மனிதருள் மனங்களாய்



பிரிந்தவர்கள் கூடியபோது
பிரிந்தது
சோகம்



சிரிக்கின்றது சாவும் சிலவேளை 
தன்னிலை மறந்து என்னைப் பார்த்து 
உன்னால்...



அங்கும் இங்கும் சிரித்தன நட்சத்திரங்கள்
தெரிந்தது
பிய்ந்த கூரையூடு




மறைந்து இருந்ததை
மீட்டுவந்தது
மழை - வானவில்



ஆசையாய் ஊதிக்கொண்டிருந்தேன் குமிழிகளை
உடைந்தன எல்லாம் 
என் மன ஆசைகள் போலவே

வல்வையூரான்.

Post Comment

10 கருத்துகள்:

  1. அத்தனையும் அருமை ஹைக்கூக்கள் சகோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றிகள் நேசன். இன்னும் சில நாட்களில் மாலை போடுவிங்கள் போல?

      நீக்கு
  2. நன்றாக இருக்கிறது அண்ணா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் இம்ரான். நீண்ட நாளின் பின் பதிவுலகப்பக்கம். நீங்களும் எழுதுங்கோ. நன்றிகள் ஐயா வரவுக்கும் கருத்துரைக்கும்.

      நீக்கு
  3. உதிர்ந்துகொண்டிருந்தன இலைகள்
    உதிராமல் உதிரத்துள்
    உன் நினைவுகள்///

    அருமையான வரிகள்

    பதிலளிநீக்கு
  4. நன்றிகள் பிரகாஷ் அன்பான வருகைக்கும் கருத்துரைக்கும்.

    பதிலளிநீக்கு
  5. பேசவில்லை
    நிறைய இருந்தன
    காரணங்கள்
    >>
    ஈகோ விட்டு பேசி பாருங்க

    பதிலளிநீக்கு
  6. அன்பின் வல்வையூரான் - குறுங்கவிதைகள் அருமை

    பிரிந்தவர்கள் கூடியபோது
    பிரிந்தது
    சோகம் - குறுங்கவைதையும் அருமை - இணைக்கப்பட்ட படமும் அருமை

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா10:49 PM, நவம்பர் 10, 2013

    அனைத்தும் அருமை...

    பதிலளிநீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.