ஆலயங்களில் மணியொலிக்க
ஆகுதிகளுக்கு விளக்கெரிக்க
தாமாகவே கண்பனிக்க
தரணியில் மீண்டுமோர் கார்த்திகை
கார்த்திகை செல்வங்களான
கண்மணிகளே மாவீரர்களே
பார்தனில் தேடுகின்றோம்
பாசங்களே உங்கள் கோவில்
கோவிலதை உடைத்துப்பகை
கோலவிழாக்கள் கொண்டாடினர்
பாவியர்க்கு சந்தோசமாம்
பாழாக்கி விட்டனராம் துயிலுமில்லங்களை
துயிலுமில்லங்களைத் துடைத்தாலும்
துடைபடுமோ உங்கள்நினைவு
விழிகளில் வழிகின்றநீர்
விபரத்தை விளம்பித்தான் நிற்காதோ
நினைவெல்லாம் நீங்கள்தானே
காற்றென வந்தவரே
கனலென நின்ற கற்பூரங்களே
கற்பூரங்களுக்கு விளக்குவைப்போம்
கார்த்திகையில் விழாஎடுப்போம்
தமிழராய் ஒன்றுபடுவோம்
தரணியில் தமிழரசு அமைப்போம்.
வல்வையூரான்.
Tweet | ||||
அழகாக அடுக்கப்பட்டுள்ளன உணர்வு நிறைந்த வரிகள்.. பாராட்டுக்கள்
பதிலளிநீக்கு///துயிலுமில்லங்களைத் துடைத்தாலும்
துடைபடுமோ உங்கள்நினைவு///
உங்களோடு சேர்ந்து நானும் அவர்களை நெஞ்சம் நிறைந்து வணங்குகிறேன். பகிர்தலுக்கு நன்றிகள்
நன்றிகள் பூங்கோதை.
நீக்குகோவிலதை உடைத்துப்பகை
பதிலளிநீக்குகோலவிழாக்கள் கொண்டாடினர்
பாவியர்க்கு சந்தோசமாம்...............நல்ல வரிகள்---..எங்கும் வியாபித்திருக்கும் வீரம்.....தொடர்கபணி........அண்ணா நன்றிகள்
நன்றிகள் பூமுகன்
நீக்குமாவீரர் தின நல் வாழ்த்துக்கள் அண்ணா...
பதிலளிநீக்கு