திங்கள், 19 நவம்பர், 2012

ஹைக்கூக்கள் 2




அப்பல்லோ இல்லை
சந்திரனையும் கடந்து
காதலர்கள்.




இணைபிரியா தோழன்
ஏழைக்கு
பசி














சும்மா இருந்தாலும்
இருக்க முடிவதில்லை
இணையம்.


கடவுளும் பயந்தான்
கொடுப்பதற்கு
கடன்



நாற்று நடுகையில்
நனைந்தது
மனசு


இடைவிட்டு இறங்கத்துடித்தன 
காற்சட்டைகள்
வாலிபவயசு 














சிதறின சில்லறைகள்
இறந்தவன்
பிச்சைக்காரன் 

வல்வையூரான்.




Post Comment

14 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரரே...
    நலமா?

    அருமையான துளிப்பாக்கள் ...

    ///சிதறின சில்லறைகள்
    இறந்தவன்
    பிச்சைக்காரன்////

    இயலவில்லை என
    இங்கொரு யாசகத்தை
    இயல்பாய் துவக்கினேன் ...
    இருண்டது என் மனம்
    துவண்டது என்னுயிர்
    சில்லறைகள் வந்ததும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றிகள் அண்ணா. வரவுக்கும் கருத்திடலுக்கும்.

      நீக்கு
  2. ////இணைபிரியா தோழன்
    ஏழைக்கு
    பசி
    ////அருமையான ஹைக்கூ

    பதிலளிநீக்கு
  3. முதல் முறையாக ராஜ். வாருங்கள். நன்றிகள் தம்பி உங்கள் அன்பான வருகைக்கும் கருத்திடலுக்கும்.

    பதிலளிநீக்கு
  4. கவிதைகள் அருமை அண்ணா.
    குறிப்பாக..


    இணைபிரியா தோழன்
    ஏழைக்கு
    பசி

    அருமை..
    நயமாகச் சொன்னீர்கள்.

    பதிலளிநீக்கு
  5. எல்லாம் எல்லாம் எல்லாமே நல்லாயிருக்கு முகுந்தன்.என்னால இப்பிடிக் குட்டியா எழுதமுடியேல்லையே என்கிற கவலை இருக்கு எனக்கு !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ அக்கா. நன்றிகள் உங்கள் கருத்துக்களுக்கு.

      நீக்கு
  6. சுருக்கென மனதைத் துளைக்கும்
    சுருக்கக் கவிதைகளில்
    தெறிக்கின்றன பல உண்மைகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றிகள் ஐயா. மேலானவர்களின் கருத்துக்களும் மேலானவையே.

      நீக்கு
  7. எல்லாமே அருமை.!
    அதிலும் "இணை பிரியாதோழன் ஏழைக்கு பசி" என்னை ஏதோ செய்கிறது.!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றிகள் காட்டான் மாமா. பலருக்கு இந்த கவி பிடித்திருக்கிறதோ?

      நீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.