தமிழ் அழகு மொழி - அறிவு
சிறந்தோர் உதித்த மொழி
தமிழுக்கு அழகு ழகரம் - அந்த
தமிழ் இன்று இழந்தது பல
நாடு இழந்தோம்
நகரிழந்தோம்
தன்னிகரிலா உறவுகளை இழந்தோம்
தங்கி வந்த நாட்டில்
தமிழில் எங்கள் பேரிழந்தோம்
இத்தனையிலும் பெருமையும் கொண்டோம்
இது எங்கள் சிறுமைதானே
தமிழன் நாம் பலர்
பேசுவது தங்கிலிஸ்
பேசுவது தங்கிலிஸனாலும்
அதிலும் பெருமை கொள்ளும்
சிற்றரிவினர் எம்மில் பலர்
லகரமும் ழகரமும் றகரமும் ரகரமும்
எம்மில் பலருக்கு
சரியாக வருதில்லையாம்
தமிழை காதலி
தமிழுக்காக வாழ்ந்து பார்
அழகு தமிழ் உன்னோடு கொஞ்சும்
தமிழன் என்று சொல்வது பெருமை
தலை நிமிர்ந்து நிற்பது பெருமை
தமிழ் காத்து வாழ்வோம்
தலை வகுத்த வழி நிற்போம்.
வல்வையூரான்
Tweet | ||||
சிறப்பு...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...
நன்றிகள் அண்ணா
நீக்குஅவசியமான பதிவு... தமிழ் காப்போம்...
பதிலளிநீக்குபதிவிற்காக நன்றி
நன்றிகள் பூங்கோதை.
நீக்குதமிழைக் காத்து வாழ்வோம்....!!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
சிறிய இடைவெளியின் பின் உங்களைக் காண்கின்றேன். நன்றிகள் வருகைக்கும் பதிவிடலுக்கும்.
நீக்குகாலத்தின் தேவை கருதி வெளிப்பட்ட உணர்வுகள்.
பதிலளிநீக்குகாலங்கள் கடந்தும் தமிழ் வாழும் உங்களை போன்ற உணர்வாளர்களால். வாழ்த்துக்கள் ஐயா.
நன்றிகள் தம்பி.
நீக்குதமிழ் மொழி பற்றை சொல்லி.. அருமை!
பதிலளிநீக்குநன்றிகள் உஷா அன்பரசு...
நீக்குதமிழன் என்று சொல்வது பெருமை
பதிலளிநீக்குதலை நிமிர்ந்து நிற்பது பெருமை
தமிழ் காத்து வாழ்வோம், இதை தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாக புரிந்துகொண்டால் சரிதான். புரிந்தால் தானே தம்பி....:)