செவ்வாய், 7 மே, 2013

ஹைக்கூக்கள் 11

கண் விழித்ததும் கைபேசி
முழு ஆக்கிரமிப்பாய் நீ
முகப்புபக்கம்




நாளைய பொழுதுகளில்
காணாமல் போகின்றன
நேற்றுக்கள்



சிலுவையில் இன்று
அறையப்படுகின்றன
சிலுவைகளும்.



குளிர் நிழலில் இருந்தாலும்
கொதித்தபடி இருந்தது
மனசு.



பிறந்தநாளில் சந்தோசமாக இருக்கையில்
பின்னால் நின்று சிரித்தது காலம்
நான் போகின்றேன் என்று.



சிரித்தபோது வலித்தது
உதடுகள் மட்டுமல்ல
உள்ளிருந்த வேதனையும் தான்.



உனக்கான இருப்பை 'நான்'
தேடிக்கொண்டிருக்கின்றேன்
என்னைக் காணாமலே.



உறவுகள் உருமாறியது
உருவானது
பணம்.



நிரந்தர வாடிக்கையாளனாக நான்
நித்திய வியாபாரியாகவே
இறைவன்.
வல்வையூரான்.

Post Comment

13 கருத்துகள்:

  1. ம்ம்ம்..அருமையான ஹைகூக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றிகள் செய்தாலி. முதல் வருகை நல்வரவாகட்டும். தொடர்ந்து ஊக்கம் தாருங்கள்.

      நீக்கு
  2. எல்லாமே நன்னாயிருக்கே பேஷ் பேஷ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றிகள் முத்தரசு அண்ணே. தொடர்ந்து வாருங்கள்.

      நீக்கு
  3. இனிய வணக்கம் சகோதரர் முகுந்தன்...
    ஏற்கனவே முகநூலில் படித்து ரசித்திருந்தாலும்...
    இங்கே வலையில் பின்னப்பட்டு
    மொத்தமாக பார்க்கையில் ....
    மொத்தமாக பறித்து குவியலாகப்பட்ட
    செம்பருத்தி மலர்கள் போல '
    வண்ணம் மனதைக் ஈர்க்கிறது.
    அருமையான துளிப்பாக்கள்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் உங்கள் போன்றோரின் ஊக்கங்கள் தான் அண்ணா.

      நீக்கு
  4. ஆழமான சிந்தனையுடன் கூடிய
    அருமையான கவிதைகள்
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. ஆஹா அருமை அருமை வாழ்த்துக்கள்...!

    பதிலளிநீக்கு
  6. அருமை
    ."நாளைய பொழுதுகளில்
    காணாமல் போகின்றன
    நேற்றுக்கள்.."

    பதிலளிநீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.