சனி, 11 மே, 2013

ஹைக்கூக்கள் 12

 
மாணவர் போராட்டங்கள் இந்தியாவை உலுக்கிய நேரத்தில் எழுதப்பட்டவை இந்த ஹைக்கூக்கள்.
பசியால் நலிந்தாலும்
நலியாமல் வளர்வது
பட்டினிப் போராட்டம்.

இழுத்து மூடப்பட்டாலும்
முழுமூச்சாய் தொடர்கிறது
முன்மாதிரிகளின் போராட்டம்.மயங்கி கிடந்தவர்களையும்
விழிக்க வைத்திருக்கிறது
மயங்கிய இவர்கள் போராட்டம்விசிறிகளுக்கும்
வியர்த்துக் கொட்டுகிறது
விடுக்கப்பட்ட(??!!) அறிக்கை.

 

அரச நிழலில் அமர்ந்திருப்பது
புத்தனல்ல
புதுப் பேய்கள்.
வல்வையூரான்.

Post Comment

10 கருத்துகள்:

 1. ஹைக்கூ கவிதை சிந்திக்க வைக்கின்றது இந்தப்போராட்டாமும் நீர்த்துப்போய்விட்ட்தோ இப்போது??!ம்ம் விசிறி அறிக்கை பிடித்த ஹைக்கூ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீண்ட இடைவேளையின் பின் வரவு நண்பா??? தொடர்ந்து வாருங்கள்.

   நீக்கு
 2. உணர்வுகளும் உணர்சிகளும் மிகுந்து
  நடத்தப்பட்ட போராட்டம்...
  விதை நன்கு ஊன்றப்பட்டது...
  விளைச்சல் காணுமுன் அழிக்கப்பட்டது....
  ==
  அழகழகான உணர்ச்சி மிகுந்த
  துளிப்பாக்கள் சகோதரரே...
  தொடருங்கள்...
  வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 3. தங்கள் அருமையான பதிவுகளை TamilBM( http://tamilbm.com/ ) திரட்டியிலும் இணையுங்கள்.

  பதிலளிநீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.