செவ்வாய், 28 மே, 2013

ஹைக்கூக்கள் 14

முடிந்து போனது மே 18
முடியாமல்
வழிகிறது கண்ணீர்.
தேடிக்கொண்டிருக்கிறேன்
காரணங்களை
என்னை வெறுப்பதற்கு.
விம்மும் போது
விளங்கியது
விபத்து.
அவன் காதல்
ஆரம்பித்ததும் முடிந்ததும்
'நன்றி'யில்
குளிர்ந்தபோது
தெரிந்தது
உள்ளிருந்து வெப்பம்.
விலையேற்றம்
குறைந்தது
விபச்சாரம்.
மௌனங்கள் போசிக்கொண்டன
அழுதது
குழந்தை.
அடிக்கப்பட்டது
உடைகின்றன
கற்களும் குழந்தைகளும்!!
சப்பாத்துக்களைத் துடைத்தான்
தூசு தட்டுப்படட்டும்
மனங்களில் இருந்து.
பெரும் பாலபிஷேகம்
இறைவனுக்கு,
குழந்தைக்கு? 
வல்வையூரான்.

Post Comment

19 கருத்துகள்:

 1. நீண்ட நாளின் பின்னர் உங்கள் தளம் வந்தேன அந்த தானியங்கி வானொலி மானத்தை வாங்கி விட்டது... அடுத்த தரம் வீட்டில் இருந்து தான் உங்கள் புளொக் திறக்கலாம்

  பதிலளிநீக்கு
 2. அருமை அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு

 3. முடிந்து போனது மே 18
  முடியாமல்
  வழிகிறது கண்ணீர்.

  இதயத்தின் வலிகளைச் சொல்லும் இரண்டு வரிகள் அருமை !!
  மேலும் தொடர வாழ்த்துக்கள் சகோதரரே .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றிகள் அக்கா. முதல் வருகை. தொடர்ந்து வாருங்கள்.

   நீக்கு
 4. சிந்தனையை தூண்டும் குறும்பாக்கள்! பிழைகளை தவிர்த்தால் இன்னும் அழகு பெறும்! வாழ்த்துக்கள்! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றிகள் சுரேஷ். கவனத்திலேடுக்கின்றேன் உங்கள் சுட்டுதலை.

   நீக்கு
 5. arumai,
  sinthanai thelivu
  sol aalumai
  vazhthukkal
  sathish kumar

  பதிலளிநீக்கு
 6. நன்று.
  சிந்திக்கவும் வைத்தது.
  "அவன் காதல்
  ஆரம்பித்ததும் முடிந்ததும்
  'நன்றி'யில் "

  பதிலளிநீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.