செவ்வாய், 14 மே, 2013

ஹைக்கூக்கள் 13.


நான் விழுந்ததும், வலித்தது
எனக்கல்ல
தாய்க்கு.
இன்றும் எங்கும்
விற்பனைக்கில்லை
தாயன்பு.உள்ளே போனதால்
உளறப்பட்டன உண்மைகளும்
குடிஅன்றிருந்தது
இன்றில்லை
நீயும் உன் அன்பும்.பெண்மையில் திருடப்பட்டது
நாணம்
புதுமைப் பெண்?அரிதாகின்றது
தமிழ்நாட்டில்
தமிழ் !!!.அழகாய் தெரிவது
மலரா ?
மங்'கை'யா ??என் இதயம் துடிக்காமலே இருந்துவிடட்டும்
பத்திரமாக
அவள் தூங்குகிறாள்.சுயிங்கமாகியது வாழ்க்கை
தினமும்
சப்பப்படுகிறது, இழுக்கப்படுகிறது.

வல்வையூரான்.

Post Comment

13 கருத்துகள்:

 1. இனிய வணக்கம் சகோதரரே..
  சமூக நோக்கமும்
  உள் உணர்சிகளும் போட்டுபோட்டு
  வந்திருக்கின்றன
  கவி வரிகளில்..
  அருமையான துளிப்பாக்கள்...
  வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 2. ஆழமான சிந்தனையுடன் கூடிய அருமையான
  கவிதைகள்.தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. அத்தனையும் அழகு... அருமை...

  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றிகள் அண்ணா. தவறாமல் ஒவ்வொரு பதிவுக்கும் வந்து கருத்திடுகின்றீர்கள். உங்களுக்கு நிகர் நீங்களே.

   நீக்கு
 4. மனதினை தொட்ட கவிதைகள்.ஹைக்கூ கவிதைகளின் சிறப்பே சில வரிகளில் சொல்ல வந்ததை சட்டென மனதில் பதியவைப்பதுதான் அந்த வகையில் உங்கள் கவிதைகள் மனதில் சட்டென பதிகிறது .இந்த வகை கவிதைகள் உங்களுக்கு நன்கு வருகிறது .தொடர்ந்து இதில் கவனம் செலுத்தவும் .பொதுவாக கவிதைகள் எண்டால் எட்டி நிற்பவன் விலக்கு இந்த வகை கவிதைகள் .எனது மனதை கொள்ளை கொள்கின்றன .
  நன்றிகள் வல்வை ஊரான்


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றிகள் கரிகாலன். தொடர்ந்தும் உங்கள ஆதரவைத்தாருங்கள். நீங்கள் கனடாவில் இருப்பதால் சந்தர்ப்பம் கிடைக்கும்போது சந்திக்கலாம்.

   நீக்கு
 5. அருமையான ஹைக்கூக்கள்! நன்றி!

  பதிலளிநீக்கு
 6. பதில்கள்
  1. நன்றிகள் ஐயா வரவுக்கும் கருத்துக்கும். தொடர்ந்து வாருங்கள்.

   நீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.