செவ்வாய், 1 அக்டோபர், 2013

காகித எழுதி.


தேர்ந்த கவி ஒருவனின் 
கைகளில் சிக்கிக்கொண்ட
காகித எழுதி
கன வேகமாக நிரப்பிக்கொண்டிருந்தது
காகிதத்தின் வெற்றிடங்களை
கனமான பொருளோடு...

சிறந்த சிந்தனாச் சிப்பியின்
கைகளில் சிக்கிய
சிறிய தூரிகை 
கிறுக்கிய
அகண்ட நெடிய 
ஓவியத்தைப்போல் 
நிறைத்து வழிந்தன
கவிதைகள்
வெற்றிடத்தில் இருந்து
வெற்றிடத்தைப் பற்றியதாக...

சூனியத்தில் இருந்து
வெறுமையில் இருந்து
பிறந்துகொண்டிருந்தது
பெருமைகளின் சிந்தனை

பிரசவிக்கும் தாயின்
முக்கலும் முனகலும் இல்லாமலே
பிரசவித்துக்கொண்டிருந்தது
காகித எழுதி
கவிதையை

நியாங்களில் இருந்து
நிஜங்களில் இருந்து 
வெறுமையை
நிரம்பிக்கொண்டு
பிறந்துகொண்டிருந்தது
அந்தக் கவிதை

தேன் நிறைந்த பூவின்
வாசமாக 
கிறங்க வைத்தன
வெற்றிடத்தைப் பற்றி
வெறும் காகிதத்தில் 
நிரம்பிக்கொண்டிருந்த 
வித்தக கவி

கவிதை 
சுவைக்க வந்தோர்
பூரணையில் மதுவருந்தி
களிக்கும் தேனிகளையொத்த
களிப்புடனே
பருகினர்
சுவைத்தனர் 


சுவைத்தவர் 
நிறைத்தனர்
தம் மன வெற்றிடத்தை;
வெறுமையே மிஞ்சியது
தேர்ந்த கவிக்கு

பிரசவ தாதியாய்
தன்னை மீண்டும் 
தயார் படுத்திக்கொண்டது
ஓர் காகிதம்
காகித எழுதியின்
புதிய பிரசவிப்புக்காய்

தேர்ந்த கவியின்
கைகளில் மீண்டும் சிக்கியது
காகித எழுதி...

வல்வையூரான்.

Post Comment

16 கருத்துகள்:

  1. சூனியத்தில் இருந்து
    வெறுமையில் இருந்து// இரண்டும் ஒன்றுதானே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டும் ஒன்றுதான். ஆனாலும் கவிதை சந்தம் கருதியும் மன மற்றும் வெளி வெருமைகளைக் குறிக்கவும் பயன்படுத்தினேன். நன்றிகள் வரவுக்கும் உங்கள் கருத்து பகிர்வுக்கும்.

      நீக்கு
  2. ரசித்தேன்... சுவைத்தேன்...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. பள்ளிக் குழந்தைகளிடம் ஒரு சுவாரஸ்யமான உரையாடல்... பறப்பதற்கு தயாராக இருங்கள்...!

    Link : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/If-you-are-a-BIRD.html

    பதிலளிநீக்கு
  4. பிரசவிக்கும் தாயின்
    முக்கலும் முனகலும் இல்லாமலே
    பிரசவித்துக்கொண்டிருந்தது
    காகித எழுதி///உண்மைதான் அற்புதம்

    பதிலளிநீக்கு
  5. ஒவ்வொரு கவிதை படைக்கப்பட்ட பிறகும், வெற்றிடமாகி மீண்டும் தன்னை அடுத்த கவிக்கு தயார் செய்துகொண்டு விடுகிறது என்பதை அழகாக கூறியுள்ளீர்கள் அண்ணா...

    நல்ல பொருள், அழகான கவிதை...

    பதிலளிநீக்கு
  6. அருமை...

    ***நியாயங்களில் இருந்து
    நிஜங்களில் இருந்து
    வெறுமையை
    நிரம்பிக்கொண்டு
    பிறந்துகொண்டிருந்தது
    அந்தக் கவிதை****

    என்னவொரு வாரத்தை கையாளல்... கவிதை முழுமையும் வாசித்தேன்.. அருமை சார்..

    என்னுடை தளத்தில் இன்று: "ஒரே படத்தில் இரட்டையர்களைப் போல படம் எடுக்கப்பயன்படும் ட்வின் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்"

    பதிலளிநீக்கு
  7. ஊக்கமும் விடா முயற்சியும் உன்னத படைப்பாளியை
    இன்றல்ல என்றேனும் ஒரு நாள் அறிமுகப் படுத்தும் என்றே
    காத்திருக்க வைக்கின்றது நம்பிக்கை என்னும் பெரும் தூண்கள் !
    அருமையான கவிதைப் படைப்பிற்கு வாழ்த்துக்கள் சகோதரரே .

    பதிலளிநீக்கு
  8. காகிதமும் காகித எழுதியும் அருமையான கற்பனை!
    சிலையெனச் செதுக்கிய சிறந்த வரிகள்!

    வாழ்த்துக்கள்!

    த ம.4

    பதிலளிநீக்கு
  9. ".. காகிதத்தின் வெற்றிடங்களை
    கனமான பொருளோடு....." நன்றாக அமைந்த கவிதை

    பதிலளிநீக்கு
  10. சூனியத்தில் இருந்து
    வெறுமையில் இருந்து// இரண்டும் ஒன்றுதானே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டும் ஒன்றுதான். ஆனாலும் கவிதை சந்தம் கருதியும் மன மற்றும் வெளி வெருமைகளைக் குறிக்கவும் பயன்படுத்தினேன். நன்றிகள் வரவுக்கும் உங்கள் கருத்து பகிர்வுக்கும்.

      நீக்கு
  11. காகித எழுதி ...
    கவிதை எழுதி...
    கலக்குங்கள் எழு(த்)தி(ல்)

    பதிலளிநீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.