ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

என் இருப்பிடம்


மௌனத்தின் கதவுகள் தட்டப்படுகையில்
மெல்ல எட்டிப்பார்க்கின்றது உன் வெட்கம்
மல்லிகைப் பூவின் வாசம்போலவே
மெல்ல தவழ்கின்றது உன் புன்னகை

வியாழன், 28 ஆகஸ்ட், 2014

ஹைக்கூக்கள் 33



உரல் உலக்கைகளை கைவிட்டுவிட்டோம்
தினமும் இடிபடுகின்றோம்
தமிழரானதால்.

செவ்வாய், 29 ஜூலை, 2014

நீ மீளும் நாளேது


காலம் காத்தால
கிழக்கு வெளிக்க முதல்
கருக்கலில் விளக்கெடுத்து
காடுபோய் வந்து

சனி, 26 ஜூலை, 2014

கனவுகளும் விழிக்கும் ஈழத்தில்


இளைஞர்களே கனவு காணுங்கள்
இவ்வண்ணம் கலாநிதி அப்துல்கலாம் சொன்னாராம்.
இனிப்பாய் இலட்சியமாய் கனவுகள் காண
இலட்சியத்தின் கனவுகள் எங்களுக்கும் இருக்குது.

நீண்ட மூச்சு உள் இழுத்து
நிம்மதியாய் வெளியே விட்டு
ஆழ்ந்த தூக்கம் போட
அலையாய் அலைகின்றது மனம்

அதிகாலையிலேயே எழுந்து
அரக்க பரக்க தயாராகி
அங்கொரு வேலை இங்கொரு வேலையென்று
ஆவி உருக்கி வேலைசெய்து

பாதி சம்பளம் வரியாய்க்கட்டி
மீதி அதைப் பாதி பாதியாக்கி
சாதிசனமென்று தூக்கி ஊருக்குப்பாதி...
மீதியாய் கால் சம்பளம் கையில்

கையில் இருப்பதில் காருக்கும்,
காப்புருதிக்கும், கடனாய் வாங்கிய வீட்டுக்கும்,
கணக்கில்லாமல் பெருகிய கழகங்கள் சங்கங்களுக்கும்,
கடனட்டைக்கும் கட்டியது போக கடனே கையில் மிஞ்சுது.

கடனை கஷ்டத்தை நினைத்தபடி
கண்விழித்துதிருந்து காலைப்பொழுதில் கண்மூட
கலர்கலராய் கனவு வருமென்றால்
கதிகலங்க வைத்தபடி வருகுது கனவுகளும்

காது செவிடுபடும்படி வெடிகுண்டோசைகளும்,
கலகலத்து விழுந்தழியும் கட்டிடங்களும்,
கனதியான கால்சப்பாத்துகளும் கைதுகளும்,
கண்ணீரோடு காணமல் போனோரைத்தேடும் உறவுகளும்...

இளைஞராய் இயற்கையை வென்று
இலட்சியமாய் கனவு காண முடியாமல்
இயல்பான நித்திரை இழந்து
இற்றுப்போய் நொந்துபோய் வாழும் சாதாரண பிறவிகளாய்...

இலட்சியத்தின் நெருப்பு இன்னும் இருக்குது
இனிதாய் நிறு பூத்து... நிமிர்ந்தெழும்...
இன்றில்லாவிட்டாலும் வென்றிடும் தமிழ் அன்று
இயல்பாய் எங்கள் இனிய கனவுகளும் விழிக்கும் ஈழத்தில்.

வல்வையூரான்.

புதன், 23 ஜூலை, 2014

கனக்கின்ற இதயங்கள்


இந்த நாள்...
ஏதோ ஒருவகை
ஏகாந்தம் கவ்விக்கொள்கின்றது
உயிரைத் தின்ற
குருதியின் நொடி

நாசியில் வட்டமிடுகின்றது
காரில் தட்டிய
வானொலியின் பாடலும்
காதில் "ஓ" என்ற
ஓலமாய் படுகின்றது
வீட்டில் ஓடவிட்ட
தொலைக்காட்சியில்
போகும் காட்சிகளையும்
கோரமாய் பிணக்குவியலாய்
காண்கிறது மனது

ஒவ்வொரு வருடமும்
இந்த நாள்
இந்த வாரம்
இந்த மாதம்
வந்து போகையில்
ஒரேவகை உணர்வுகள்
உயிர் குடித்த உணர்வுகள்
உருக்குலைந்த பிம்பங்கள்...

ஓலத்தின் வாசலாய்
சாதலின் தரிசனமாய்
ஞாலத்தின் நிதர்சனமாய்
கனக்கின்ற இதயங்களாய்
காகிதத்தில் கவிவரிகளாய்...

வல்வையூரான்.

திங்கள், 30 ஜூன், 2014

கண்ணீருடன் விளக்குகள்


நந்திக்கடல் சற்று மிதமாகவே
ஓலமிட்டு அழுகின்றது
காலை வானம் கூட
வழமைக்கு மாறாய்
ரத்தமாய் சிவந்து விடிகின்றது
விடிந்த வந்து சூரியனை
கரிய மேகங்கள்
கடுதியாக வந்து மறைக்கின்றன
வானத்தில் மீண்டும் வெடியோசை
மின்னல் கொடி தாவிப் படர்கின்றது
கண்ணீர்த் துளிகளாய்
ஓவென்ற அழுகுரலோடு
கோடையிலும் மழை
முல்லிவாய்க்கால் மண்
மீண்டும் ரத்த சிவப்பை
நினைத்து அலறுகின்றது

செவ்வாய், 24 ஜூன், 2014

ஹைக்கூக்கள் 32




உருப்படியாக உத்தரவிட்டாய்
உயிர்ப்பிருக்கிறது உன்னிடமும்
உணர்வுகளாய் நன்றிகள் ...

செவ்வாய், 3 ஜூன், 2014

ஹைக்கூக்கள் 31



மூவர்ணக் கொடியின் நடுவே
கரும் புள்ளி
தமிழின அழிப்பா?

புதன், 21 மே, 2014

ஹைக்கூக்கள் 30




கலகலத்து சிரிக்கவில்லை பிச்சைப்பாத்திரம்
குரலெடுத்து அழுகின்றன
குழந்தைகள் பசியில்.

வெள்ளி, 2 மே, 2014

சிணுங்கல்கள்


செல்ல சிணுங்கல்களோடு
மெதுவாக ஆரம்பிக்கின்றாய்
நிதானமாக சிணுங்குகின்றாய்
சின்ன சின்ன விசயங்களில்

சனி, 26 ஏப்ரல், 2014

வெட்கமாக இருக்கின்றது



வெட்கமாக இருக்கின்றது
சொல்லிக் கொண்டே
வெட்கப்படுகின்றாய்

கன்னம் சிவக்க
காதோரம் சூடேற
முன்னம் தலை குனிந்து
முகம் முறுவல் கொண்டு

சனி, 19 ஏப்ரல், 2014

நினைவும் வலியும்



வேகமான மழை நாளொன்றில்
சடசடத்தபடி விழுந்தன
பெருந்துளிகள்
மண்ணை கிளறியபடியே
படபடத்த என் மனதை
கிழிக்கும்
உன் எண்ணங்கள் தந்த
வலியை வேதனையை
மிதமாகவே உணர்ந்தேன்,

வியாழன், 17 ஏப்ரல், 2014

எங்கள் வயல்கள்



எங்கள் ஊர் வயல்களில்
நாங்கள் விதைப்பதற்று
மறுக்கப்பட்டு
முளைத்துக்கொண்டிருந்தன
நீர் முள்ளிகளும் காஞ்சோண்டிகளும்

சனி, 29 மார்ச், 2014

வசதியான அகதி


எங்கள் வயலில்
அறுத்த கதிரில்
எடுத்த அரிசியை

அம்மம்மா நனையவிட்டு
கல்லுரலில் தாளகதியில்
மாத்துலக்கை போட்டு
மாவாக எடுத்து
விறகடுப்பில் வறுத்து
இடியப்பம் அவித்து வைக்க

வெள்ளி, 21 மார்ச், 2014

கவியோ? (மார்ச் 21 உலக கவிதைகள் தினம்)

ற்றை வரியில் 
ஒரு சொல்லை வைத்து
செத்த சொல்லெடுத்து
சிங்காரம் பண்ணி
மற்ற வரிகளில்
மளமளவென வைத்து
மனதிலுள்ளதை
மக்கள் விளங்க
மகிழ்வாக மருவில்லாமல்
வைத்து வடித்தால்
வருவது கவியோ?...

செவ்வாய், 18 மார்ச், 2014

ஹைக்கூக்கள் 29




கோப்பியிலும் வருகின்றது
போதை
கட்டிலில் நீ தருகின்றாய்

செவ்வாய், 11 மார்ச், 2014

ஒற்றுமையால் தலை நிமிர்வோம்



மீண்டும் ஒரு பிறழ்வு
ஏற்றம் தரும் என்ற
ஏதிலிகள் நம்பிக்கையில்
ஏகாதிபத்தியத்தின் அடி
சத்தியத்திற்கும் அடி

புதன், 5 மார்ச், 2014

சேர்வோம் அன்பாய்


மனிதரை மனிதராய்
பார்க்கின்ற தன்மையை
மனிதம் கொஞ்சம் கொஞ்சமாய்
இழந்துகொண்டிருக்கின்றது

திங்கள், 24 பிப்ரவரி, 2014

புலத்து வாழ்க்கை.

மயிலிறகின் மென்மையாய் 
கன்னத்தை வருடிய காற்று
சடசடத்த மழைத்துளிகளில்
துள்ளி எழுந்த மண் மணம்
குண்டும் குழியுமான ரோட்டில்
கடகடத்த வண்டில் சத்தம்
கிறீச் கிறீச் சத்தத்துடன் 
இழுக்கப்படும் துலாக்கயிறு

வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

கூலி

(வெட்டி பிளாக்கர்ஸ் சிறுகதைப் போட்டியில் மூன்றாம் சுற்றுவரை முன்னேறி பரிசைத்தவறவிட்ட சிறுகதை.)

வேக வேகமாக ஓடி வந்ததில் மூச்சிரைத்தது வதனிக்கு. வேலைக்கு வர பிந்திவிட்டது. கனகக்கா, செல்லம்மா ஆச்சி, மயிலம்மா என்று ஒரு பெரும்படையே தோட்டத்தில இறங்கிவிட்டது. இவள் மட்டும் 'லேட்'. கழுத்தில் சுற்றி போட்டிருந்த சாரத்தை (கைலி) எடுத்து போட்டிருந்த சட்டைக்கு மேலாக அவசர அவசரமாக உடுத்திக்கொண்டாள் வதனி. வேகமாக தங்கராசண்ணா பார்ப்பதற்குள்ளாக தோட்டத்துக்குள் பாய்ந்து அமர்ந்து கொண்டாள். தயாராக தான் கொண்டுவந்திருந்த வெற்றிலை சரையை எடுத்து செல்லம்மா ஆச்சியிடம் கொடுத்தாள் வதனி.

செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

ஹைக்கூக்கள் 28.




கைதட்டல்களுக்காகவே வாழ்ந்துகொண்டிருக்கின்றாய்
மயங்கிக் கொண்டிருக்கிறது உன் வீடு
பசியில்

திங்கள், 27 ஜனவரி, 2014

ஹைக்கூக்கள் 27.




வீட்டு காவலுக்கு போட்டது
இன்று காவலுக்குள் வைத்திருக்கிறது
காவலரண் முள் வேலிகள்